News October 5, 2025

சோனம் வாங்சுக் விடுதலை கோரிய மனு நாளை விசாரணை

image

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்திற்கு முக்கிய காரணம் என காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் கணவர் குற்றமற்றவர் எனக் கூறி, அவரை விடுதலை செய்யுமாறு, அவரது மனைவி கீதாஞ்சலி SC-ல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு நாளை (அக்.6) அரவிந்த் குமார், NV அஞ்சரியா அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணக்கு வரும் என பட்டியலிடப்பட்டுள்ளது.

Similar News

News April 7, 2026

பாஜக – ஸ்டாலின் இடையே ஒரு மறைமுக டீலிங் உள்ளது: மம்தா

image

மேற்கு வங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளையே பாஜக நியமித்துள்ளதாக மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். நாடியாவில் பிரசாரம் செய்த அவர், மேற்கு வங்கத்தை சேர்ந்த பல IAS, IPS அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது காங்கிரஸ் மற்றும் தமிழக CM ஸ்டாலினுடன் பாஜக ஒரு மறைமுக டீலிங் கொண்டுள்ளதை காட்டுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News April 7, 2026

ஏப்ரல் 7: வரலாற்றில் இன்று

image

▶1948 – உலக சுகாதார அமைப்பு ஐநா அவையால் தொடங்கப்பட்டது. ▶2015 – தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் என்று ஆந்திரப்பிரதேச கடத்தல் தடுப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். ▶1954 – ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பிறந்தநாள். ▶1962 – இயக்குநர் ராம் கோபால் வர்மா பிறந்தநாள். ▶1962 – நடிகை கோவை சரளா பிறந்தநாள். ▶2009 – இந்தியப் பொருளாதார அறிஞர் ராஜா செல்லையா நினைவுநாள்.

News April 7, 2026

உங்க கிச்சனை குளிர்ச்சியாக்க ஈஸி டிப்ஸ்!

image

கோடை காலத்தில் கிச்சனில் சமையல் செய்வது பெரிய சவாலாக இருக்கும். ஆனால் சில எளிய மாற்றங்கள் மூலம் உங்கள் சமையலறையை நீங்கள் குளிர்ச்சியாக மாற்றலாம். *சமைக்கும்போது ஜன்னல் மற்றும் கதவை திறந்து வையுங்கள். * சூடான காற்றை வெளியேற்ற எக்ஸாஸ்ட் ஃபேனை பயன்படுத்துங்கள். *மிகக் குறைந்த வெப்பத்தை வெளியிடும் LED பல்ப்பை பயன்படுத்துங்கள். *சமைக்கும் போது தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!