News October 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 479 ▶குறள்: அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். ▶பொருள்: தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.
Similar News
News October 5, 2025
மேடையில் எமோஷனலான மோகன்லால்

நான் செல்லும் பாதையில் எனக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் ரசிகர்களின் ‘லாலேட்டா’ என்ற குரல் தனக்கு வழிகாட்டுவதாக மோகன்லால் கூறியுள்ளார். ’தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற மோகன்லாலுக்கு கேரள அரசு விழா எடுத்தது. அதில் பேசிய அவர், இந்த அங்கீகாரம் தனக்கு மிகவும் முக்கியம் என கூறினார். மேலும், டெல்லியில் விருதை பெறும்போது எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ அதைவிட எமோஷனலாக உணர்வதாகவும் தெரிவித்தார்.
News October 5, 2025
ஞாயிற்றுக்கிழமையில் இப்படி பண்ணி பாருங்க…

‘சண்டே வருவதும் தெரியல; போறதும் தெரியல’ என புலம்பாத ஆளில்லை. லீவு நாள் என்பதால், வீட்டு வேலை செய்து, மதியம் சும்மா படுத்து தூங்கி விட்டால், ஒரு நாள் ஒன்றுமே இல்லாமல் போய்விடும். மனசும் துவண்டுவிடும். ஆனால், உங்களின் வேலையை காலையிலேயே வேகமாக முடித்து விட்டு, மதியத்திலிருந்து குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ நேரத்தை செலவிட்டு பாருங்கள். மனதில் மகிழ்ச்சி கூடும். ஒரு நாள் நிறைவாக கடந்ததை உணருவீர்கள்.
News October 5, 2025
எரியவேண்டியவர்களுக்கு எரியட்டும்: ஸ்டாலின்

எரியவேண்டியவர்களுக்கு எரியட்டும் என்பதற்காகவே திராவிட மாடல் என சொல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் பங்கேற்ற அவர், பிற்போக்குத்தனத்தை புகுத்த நினைப்பதை தடுக்கும் அரண்தான் திராவிட மாடல் என பேசியுள்ளார். மேலும், திமுகவை பிடிக்காது என சிலர் கூறினால், இடஒதுக்கீடு, சமத்துவம், சமூகநீதி பிடிக்காது என்பதுதான் அதன் அர்த்தம் என கூறினார்.