News October 5, 2025
ஹமாஸ் விரைவாக முடிவெடுக்க வேண்டும்: டிரம்ப்

டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த இஸ்ரேல், அன்றிரவே காசாவில் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். பின்னர் இத்தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தாக்குதலை நிறுத்தியதற்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், பணயக் கைதிகளை விடுவிப்பது மட்டுமல்லாமல், மற்ற அம்சங்களை ஹமாஸ் விரைவாக ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 5, 2025
தாம்பரம்: இதற்கு தடை- அமைச்சர் பதில்

தாம்பரத்தில் “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாம் நேற்று நடந்தது. இதை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். பின், பேசிய அவர் காஞ்சிபுரத்தில் தயாரான கோல்ட்ரிப் இருமல் மருந்தை சாப்பிட்டு வடமாநிலங்களில் குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில் அதை தமிழ்நாட்டில் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், மருந்து கட்டுப்பாட்டு அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
News October 5, 2025
கரூர் துயரம்.. நேரில் சென்ற தவெகவினர் (PHOTO)

தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட தவெக முக்கிய பொறுப்பாளர்கள், விரைவில் விஜய்யும் கரூர் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
News October 5, 2025
இதெல்லாம் பண்றீங்களா? கிட்னி ஸ்டோன் வரும்!

உட்கார்ந்தே இருப்பது, தண்ணீர் அருந்துவதையே மறப்பது, நைட் ஷிஃப்டில் பணிபுரிவதால் கிட்னி ஸ்டோன் உருவாகும் ஆபத்து 15% அதிகமாகும் என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இதனை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நார்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். நைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் உள்பட அனைவருக்கும் இத SHARE பண்ணுங்க.