News October 5, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளை கூட்டம் நேற்று (அக்டோபர். 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 5) முதல் முட்டையின் விலை ரூ. 5.05 ஆகவே நீடிக்கும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Similar News

News October 5, 2025

நாமக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 5, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கலில் இருந்து நாளை (திங்கள்) அதிகாலை 4:20 மணிக்கு 07356 ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயிலில் ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம்.

News October 5, 2025

நாமக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிப்பவர் நடராஜன், 42. இவர் தன் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர, டூவீலரில் சானார்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் குறுக்கே சென்றதால், நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தார், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவர் இறந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!