News April 15, 2024

பி.ஆர்.டி.சி., பஸ் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

image

புதுச்சேரி தேர்தல் அலுவலகம் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பாக, புதுச்சேரியில் இயங்கும் பி.ஆர்.டி.சி. பஸ்களில் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பெரிய அளவிலான பேனர் வைத்து புதுச்சேரி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Similar News

News September 17, 2025

நாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை

image

பதினைந்தாவது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நாளை 18ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவையின் மைய மண்டபத்தில் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் கோப்புகளை தாமதப்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

News September 17, 2025

புதுச்சேரி: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

புதுகை மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <>Click Here<<>>
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

புதுவை: திருநள்ளாறு கோயில் வாட்ஸ்அப் எண் வெளியீடு!

image

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஆலோசனை, குறைகள் மற்றும் தரிசன குறைபாடுகளை சுட்டிக்காட்டும் புகைப்படங்கள், குரல்செய்தி மற்றும் குறுஞ்செய்திகளை +91 949 872 8334 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!