News October 5, 2025

நெல்லையில் தடை உத்தரவு

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி விடுத்துள்ள செய்தி குறிப்பில்; நெல்லை மாவட்டத்தில் ஐந்தாம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதன்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா கூட்டங்கள், பேரணி, ஊர்வலம் போன்றவைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 5, 2025

நெல்லை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்…APPLY!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) நெல்லை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 5, 2025

நெல்லையில் அரசு பேருந்து மேன் மீது மோதி விபத்து

image

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் வழியாக சென்ற அரசு டவுன் பேருந்து ஒன்று இன்று இரவு திடீரென பிரேக் பிடிக்காமல் திணறியுள்ளது. அப்போது அந்த பேருந்தின் பின்புறமாக வந்த வேன் மீது லேசாக பேருந்து மோதியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரியார்கள் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 5, 2025

மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (அக். 4) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!