News October 5, 2025

அக்டோபரில் மாற்றுப்பாதையில் இயங்கும் முக்கிய ரயில்கள்

image

மதுரை கோட்ட ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 16848 (செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்): அக்டோபர் 4 முதல் 31ம் தேதி வரை, (அக். 8, 15, 19, 20, 21, 29 ஆகிய தேதிகளைத் தவிர) மற்ற நாட்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். ரயில் எண் 16847 (மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்): அக்டோபர் 4 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Similar News

News October 4, 2025

தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்டம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி,புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இன்று‌ (04.10.25) இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News October 4, 2025

தென்காசி: B.E / B.Tech -ஆ; அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: C<>LICK HERE <<>>. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க..

News October 4, 2025

தென்காசி: கார் மோதி முதியவர் பலி

image

களக்காடு பகுதியை சேர்ந்த கிஷோர் சந்துரு என்பவர் இன்று அக்.4 நண்பர்களுடன் குற்றாலம் சென்று விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது சாலையை கடந்த மருதம்புத்தூரை சேர்ந்த இசக்கி முத்து (70) என்பவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!