News October 5, 2025
இமயமலைக்கு பறந்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரிஷிகேஷ் ஆசிரமத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த ஒரு வார கால பயணத்தில், பத்ரிநாத் கோயில், பாபா குகைக்கு அவர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய படங்கள் வெளியாகும் போதும், மன அமைதி தேவைப்படும் போதும் ரஜினிகாந்த் இமயமலை செல்வது வழக்கம்.
Similar News
News October 5, 2025
தமிழகத்தின் அரசியலால் தீண்டாமை: RN ரவி

தமிழகத்தின் தற்போதைய அரசியலால் தீண்டாமை, பிரித்தாள்வது நிகழ்வதாக கவர்னர் RN ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மாநிலத்தில் சமூகநீதிக்கு எதிரான சம்பவங்களை தினமும் செய்தித் தாள்களில் படிப்பது வேதனையாகவுள்ளதாகவும் கூறியுள்ளார். பங்கேற்று உரையாற்றிய அவர், கேரள அரசியல் நாராயண குருவின் கொள்கைகளை முடக்கவில்லை என தெரிவித்த அவர், தமிழக அரசியல் வள்ளலாரின் போதனைகளை பரப்ப முன்னுரிமை அளிக்கவில்லை என்றார்.
News October 5, 2025
டிராபியை கொடுக்காமல் இருந்ததற்காக தங்க பதக்கம்

ஆசிய கோப்பை டிராபியை, பாக்., அமைச்சரும் ACC தலைவருமான மொஹ்ஷின் நக்வியிடமிருந்து பெற இந்தியா மறுத்தது. இதனால் டிராபியை தன்னுடனே எடுத்துச் சென்ற நக்வி, ACC ஆபீஸீல் வந்து டிராபியை பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருந்தார். இந்நிலையில், டிராபி தொடர்பாக நக்வி எடுத்த நிலைப்பட்டை கெளரவிக்கும் வகையில், அவருக்கு Shaheed Zulfiqar Ali Bhutto Excellence தங்க பதக்கம் வழங்கப்படவுள்ளது.
News October 5, 2025
கரூர் துயரில் அரசியல் செய்யாத கட்சி பாஜக: வினோஜ்

கரூர் விவகாரத்தில் யாரையும் ஆள் காட்டி தப்பிக்கும் பழக்கம் பாஜகவுக்கு இல்லை என வினோஜ் P செல்வம் கூறியுள்ளார். ஆனால், திமுகவினர் பழி போடுவதிலேயே குறியாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்த சம்பவத்தின் மூலம் தவெகவை NDA கூட்டணிக்கு இழுப்பதாக கூறப்படும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அவர், இதுநாள் வரை கரூர் மரணங்களில் அரசியல் செய்யாத ஒரே கட்சி பாஜக மட்டுமே என்று கூறினார்.