News October 5, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெகவினர் சந்திக்கவில்லை என தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை <<17913262>>முதல்முறையாக தவெக நிர்வாகிகள்<<>> இன்று சந்தித்து ஆறுதல் கூறினர். இதனையடுத்து, விரைவில் விஜய் கரூர் செல்வதற்கு முடிவெடுத்துள்ளார். அதற்காக, போலீஸ் அனுமதி பெறும் பணிகளில் மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். அனுமதி கிடைத்ததும் விஜய் கரூர் செல்லவுள்ளார்.
Similar News
News October 5, 2025
பெரியார் உலகத்துக்கு திமுக ₹1.5 கோடி நிதி

திருச்சியில் அமையவுள்ள பெரியார் உலகத்துக்கு தனது ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், திமுக MP, MLA-க்களின் ஒரு மாத சம்பளம் சேர்த்து மொத்தம் ₹1.5 கோடியை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதை நன்றியுணர்வோடு அளிப்பதில் திமுகவினர் பெருமை அடைவதாகவும், பெரியார் இருந்தபோதே அவருடைய சிந்தனைகளை செயல்படுத்தியது திமுக என்றும் கூறினார்.
News October 5, 2025
பலமுடன் திரும்புவோம்: வெ.இண்டீஸ் கேப்டன்

தாங்கள் 160 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது ஏமாற்றம் அளித்ததாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் கூறியுள்ளார். இந்த அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 1 இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என சேஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News October 5, 2025
பாஜகவின் C டீம் விஜய்: ரகுபதி

தமிழகத்தில் பாஜகவுக்கு யாராவது ஆள் கிடைப்பார்களா என்று பார்த்து வருகிறது, ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக ஆதரவு கிடைக்காது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். விஜய்யை பாஜகவின் C டீம் என குறிப்பிட்ட அவர், அவரை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று தெரிவித்தார். அத்துடன், யாரையும் அநாவசியமாக கைது செய்ய வேண்டிய எண்ணமும் திமுகவிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.