News October 4, 2025
Cash on Delivery-க்கு கூடுதல் கட்டணம்? அரசு விசாரணை

Cash on Delivery-க்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் குவிந்த நிலையில், இது குறித்த விசாரணையை மத்திய நுகர்வோர் ஆணையம் தொடங்கியுள்ளது. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இ-காமர்ஸ் நிறுவனங்கள் கஸ்டமர்களை ஏமாற்றும் வகையில் Dark Pattern-களை கொண்டு சுரண்டி வருவதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சாடியிருந்தார்.
Similar News
News October 5, 2025
பலமுடன் திரும்புவோம்: வெ.இண்டீஸ் கேப்டன்

தாங்கள் 160 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது ஏமாற்றம் அளித்ததாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் கூறியுள்ளார். இந்த அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 1 இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என சேஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News October 5, 2025
பாஜகவின் C டீம் விஜய்: ரகுபதி

தமிழகத்தில் பாஜகவுக்கு யாராவது ஆள் கிடைப்பார்களா என்று பார்த்து வருகிறது, ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக ஆதரவு கிடைக்காது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். விஜய்யை பாஜகவின் C டீம் என குறிப்பிட்ட அவர், அவரை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று தெரிவித்தார். அத்துடன், யாரையும் அநாவசியமாக கைது செய்ய வேண்டிய எண்ணமும் திமுகவிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
News October 5, 2025
அக்டோபர் 5: வரலாற்றில் இன்று

*சர்வதேச ஆசிரியர் தினம்.
*சர்வதேச பாலியல் தொழிலுக்கு எதிரான தினம்.
*1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கி படையெடுப்பு நடத்தப்பட்டது.
*1799 – வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறு சிறையில் அடைக்கப்பட்டார்.
*1823 – இராமலிங்க அடிகளார் பிறந்தநாள்.
*2011 – Apple நிறுவனத்தை தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவு நாள்.