News October 4, 2025
கரூர் விவகாரத்தில் EPS, பாஜக அரசியல் செய்கின்றனர்: TTV

கரூரில் நடந்தது விபத்து தான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இண்டர்போல் விசாரணை நடத்தினாலும் விபத்து விபத்துதான் எனவும், கடந்த ஒருவாரமாக EPS, பாஜகவினர் இதில் அரசியல் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை CM நிதானமாக கையாண்டது பாராட்டுதலுக்கு உரியது எனவும், வரும் டிசம்பரில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 5, 2025
பாஜகவின் C டீம் விஜய்: ரகுபதி

தமிழகத்தில் பாஜகவுக்கு யாராவது ஆள் கிடைப்பார்களா என்று பார்த்து வருகிறது, ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக ஆதரவு கிடைக்காது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். விஜய்யை பாஜகவின் C டீம் என குறிப்பிட்ட அவர், அவரை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று தெரிவித்தார். அத்துடன், யாரையும் அநாவசியமாக கைது செய்ய வேண்டிய எண்ணமும் திமுகவிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
News October 5, 2025
அக்டோபர் 5: வரலாற்றில் இன்று

*சர்வதேச ஆசிரியர் தினம்.
*சர்வதேச பாலியல் தொழிலுக்கு எதிரான தினம்.
*1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கி படையெடுப்பு நடத்தப்பட்டது.
*1799 – வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறு சிறையில் அடைக்கப்பட்டார்.
*1823 – இராமலிங்க அடிகளார் பிறந்தநாள்.
*2011 – Apple நிறுவனத்தை தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவு நாள்.
News October 5, 2025
நடிகர் ஜெயராமன் வீட்டில் சபரிமலை தங்கத்தகடு

சபரிமலை துவார பாலகர் சிலையின் தங்க கவசத்திலிருந்து 4 கிலோ தங்கம் மாயமானதாக எழுந்த குற்றச்சாட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2019-ல் நடிகர் ஜெயராமன் வீட்டில் சபரிமலை தங்கத்தகடு வைத்து பூஜை நடத்தியது தெரிய வந்துள்ளது. கோயிலின் முன்னாள் ஊழியர் உன்னிகிருஷ்ணன் போற்றி, காணிக்கை வசூலுக்காக தங்கத்தகடை பணக்காரர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.