News October 4, 2025
என்னென்ன கோல்டு லோன் இருக்கு தெரியுமா?

தங்கத்தின் அன்றைய சந்தை மதிப்பிற்கு ஏற்ற பணத்தை, வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் கடனாக வழங்குகின்றன. குறைந்த வட்டியில், அவசர நிதி தேவைகளை நிறைவேற்ற ஒரு சிறந்த வழியாக கோல்டு லோன் இருக்கிறது. என்னென்ன கோல்டு லோன் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த லோன் எடுத்து இருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News October 5, 2025
அக்டோபர் 5: வரலாற்றில் இன்று

*சர்வதேச ஆசிரியர் தினம்.
*சர்வதேச பாலியல் தொழிலுக்கு எதிரான தினம்.
*1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கி படையெடுப்பு நடத்தப்பட்டது.
*1799 – வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறு சிறையில் அடைக்கப்பட்டார்.
*1823 – இராமலிங்க அடிகளார் பிறந்தநாள்.
*2011 – Apple நிறுவனத்தை தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவு நாள்.
News October 5, 2025
நடிகர் ஜெயராமன் வீட்டில் சபரிமலை தங்கத்தகடு

சபரிமலை துவார பாலகர் சிலையின் தங்க கவசத்திலிருந்து 4 கிலோ தங்கம் மாயமானதாக எழுந்த குற்றச்சாட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2019-ல் நடிகர் ஜெயராமன் வீட்டில் சபரிமலை தங்கத்தகடு வைத்து பூஜை நடத்தியது தெரிய வந்துள்ளது. கோயிலின் முன்னாள் ஊழியர் உன்னிகிருஷ்ணன் போற்றி, காணிக்கை வசூலுக்காக தங்கத்தகடை பணக்காரர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
News October 5, 2025
பஹல்காம் தாக்குதலில் சீனா இரட்டை வேடம்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சீனா இரட்டை வேடம் போடுவதாக சீன ஆய்வு நிபுணர் ஸ்ரீகாந்த் கொண்டபள்ளி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் நடந்த பின்பு, ஒருவர் சீன சேட்லைட் உதவியுடன் செயல்படும், அதே நாட்டு மொபைல் போனில் (Huawei) தகவல் அனுப்பியதாக கூறியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்புக்கு இந்தியாவுடன் ஒத்துழைப்பு அளித்துள்ள சீனா, தாக்குதலுக்கு முன்பு பாக்.,க்கு சேட்லைட் போட்டோஸை அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.