News October 4, 2025
திங்கள்கிழமை முதல் பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

2025-26 கல்வியாண்டுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்.6 முதல் தொடங்கப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், RTE திட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்திவிடும். எனவே, தனியார் பள்ளிகளில் ஏற்கெனவே மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணங்களை 7 நாளுக்குள் திரும்ப ஒப்படைக்க பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 30, 2026
பா.ரஞ்சித் என்ன பரம்பரை எதிரியா… மோகன் ஜி கேள்வி

திருவிக நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பொற்கொடிக்கு பா.ரஞ்சித் ஆதரவு அளித்ததை திமுகவினர் சாடி வருகின்றனர். இந்நிலையில் ரஞ்சித் – மோகன்ஜி இருவரும் NDA கூட்டணி ஆதரவாளர்கள் என்று திமுக தொண்டர் ஒருவரின் கருத்துக்கு மோகன்ஜி பதில் அளித்துள்ளார். நாங்க இருவரும் என்ன பரம்பரை எதிரியா.. சிந்தனை ஒரே இடத்தில் சேரும்போது, இருவரும் ஒருவரை ஆதரிப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 30, 2026
ரேஷன் கார்டுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்

நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு 60 நாள் சிறப்பு திட்டத்தை கையிலெடுத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் விநியோகிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் நிலவும் எரிசக்தி சவால்களை சீராக்க தற்காலிக நிவாரணமாக இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 30, 2026
அமமுகவுக்கு குக்கர் சின்னம்… ECI அறிவித்தது

NDA-வில் 11 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக தனிச் சின்னத்தில் களம் காணும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த முறை போட்டியிட்ட குக்கர் சின்னத்தை மீண்டும் ஒதுக்க. ECI-யிடம் அக்கட்சி கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக ECI அறிவித்துள்ளது.


