News October 4, 2025
மோடி + விஜய் = தமிழகம்: வைரலாகும் பழைய போஸ்டர்

2013-ல் தலைவா படத்துக்கு அதிமுக ஆட்சியில் விஜய் தடைகளை சந்தித்தார். இதனால் கடுப்பான விஜய் மக்கள் இயக்கத்தினர், அடுத்த ஆண்டு ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வந்தபோது, PM மோடிக்கும், நீதிபதி குன்ஹாவுக்கும் நன்றி என்றும், ‘விரைவில் மோடி + விஜய் = தமிழகம்’ என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டினர். விஜய்யை விமர்சிக்கும் சிலர் இதை SM-ல் பதிவிட, இது தற்போது வைரலாகி வருகிறது.
Similar News
News March 25, 2026
திருநெல்வேலி: ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகர பகுதியில் ஜாதி கலவரத்தை தூண்ட முயற்சித்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட கக்கன் நகர் முருகன்(26), மந்திரமூர்த்தி(20), ராஜா 26 ஆகிய மூன்று பேரையும் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி இன்று போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News March 25, 2026
போர்.. இந்தியாவுக்கு மகிழ்ச்சி செய்தி

மேற்காசிய போர் பதற்றத்துக்கு இடையே, ரஷ்யாவிலிருந்து 60 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வாங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான தடையினை US தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் கிடைக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.
News March 25, 2026
சோனியா காந்திக்கு என்ன ஆச்சு? ரிப்போர்ட்

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி சர் கங்காராம் ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சோனியா காந்திக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ள நிலையில் காற்று மாசு, குளிர் காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது; அவரது உடல்நிலையை தற்போது டாக்டர்கள் குழு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.


