News October 4, 2025
AK-630 ரக வான் துப்பாக்கிகளை வாங்க அரசு திட்டம்

சுதர்சன சக்ரா திட்டத்தின் கீழ், AK-630 ரக வான் துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பொதுத்துறை நிறுவனமான AWEIL உடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்தில் 3,000 முறை சுடும் இத்துப்பாக்கியானது, 4 கிமீ தூரம் வரை டிரோன்கள், ஏவுகணைகள், ராக்கெட்களை சுட்டு வீழ்த்தும். இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இத்துப்பாக்கிகளை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Similar News
News October 5, 2025
ஜனாதிபதி மாளிகையில் காந்தாரா சாப்டர் 1

‘காந்தாரா: சாப்டர் 1’ படம் கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில் இப்படம் திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பிறகு, ரிஷப் ஷெட்டி, ருக்மினி வசந்த், தயாரிப்பாளர் சலுவே கவுடா ஆகியோருக்கு திரெளபதி முர்மு பாராட்டு தெரிவிப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீங்க படம் பார்த்தாச்சா?
News October 5, 2025
சோனம் வாங்சுக் விடுதலை கோரிய மனு நாளை விசாரணை

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்திற்கு முக்கிய காரணம் என காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் கணவர் குற்றமற்றவர் எனக் கூறி, அவரை விடுதலை செய்யுமாறு, அவரது மனைவி கீதாஞ்சலி SC-ல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு நாளை (அக்.6) அரவிந்த் குமார், NV அஞ்சரியா அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணக்கு வரும் என பட்டியலிடப்பட்டுள்ளது.
News October 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 479 ▶குறள்: அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். ▶பொருள்: தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.