News October 4, 2025

கரூர் துயரம்: முடிவை மாற்றினார் இபிஎஸ்

image

கரூர் துயரத்தையொட்டி நெடுஞ்சாலை பகுதிகளில் பரப்புரை செய்ய ஐகோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே, நாளை குமாரபாளையம், திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஐகோர்ட் தடையை சுட்டிக்காட்டி அவருக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, தனது முடிவில் மாற்றம் செய்துள்ள இபிஎஸ், உரிய அனுமதியுடன் அக்.8-ல் அங்கு பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

Similar News

News March 21, 2026

அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு

image

தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைந்துள்ளது. விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சி பொ.செ., பாபுஜி சவாமிகள் & அக்கட்சியின் நிர்வாகிகள் EPS-ஐ நேரில் சந்தித்து, அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவை தருவதாக தெரிவித்தனர். இலவச வீட்டு மனை, விஸ்வகர்மா சமூக நல வாரியம் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக EPS உறுதியளித்திருப்பதாகவும் பாபுஜி சுவாமிகள் கூறியுள்ளார்.

News March 21, 2026

BIG NEWS: சரசரவென சரிந்தது.. வரலாற்றில் முதல்முறை

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் 69 பைசா சரிந்துள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு ₹93.69 என்ற நிலைக்கு ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். அதேபோல், இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதும் சரிவை அதிகரித்துள்ளது.

News March 21, 2026

‘பறவைக்காய்ச்சல்’ பயம் தேவையில்லை: தமிழக அரசு

image

கிண்டியில் அடுத்தடுத்து பறவைகள் உயிரிழந்த நிலையில், பறவைக்காய்ச்சல் தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற TN அரசு அறிவுறுத்தியுள்ளது. இறைச்சிக் கடை ஊழியர்கள் கவனமாக பணியாற்றவும், கழிவுகளை பொதுவெளியில் கொட்டக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN-ல் மனிதர்களுக்கு இதுவரை பறவைக்காய்ச்சல் பாதிப்பில்லை என்பதால் மக்கள் பயப்பட வேண்டாம்; தகவல்களுக்கு 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!