News April 15, 2024
8வது முறையாக இன்று தமிழகம் வருகிறார் மோடி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று 8வது முறையாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.10 மணிக்கு நெல்லை அம்பாசமுத்திரம் வருகிறார். அங்கு, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார்.
Similar News
News November 6, 2025
அணு ஆயுத சோதனைக்கு ரெடியாகிறதா ரஷ்யா?

அதிபர் டிரம்ப் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். தொடர்ந்து ரஷ்யாவும், அமெரிக்காவும் மாறி மாறி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத சோதனைகளுக்கான திட்டங்களை தயாரிக்க தனது உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா ஒருவேளை அணு ஆயுத சோதனையை நடத்தினால், கடந்த 35 ஆண்டுகளாக உள்ள உலகளாவிய அணு ஆயுத சோதனைக்கான தடையை உடைத்துவிடும்.
News November 6, 2025
புது Syllabus-ஐ உருவாக்க உயர்மட்டக்குழு: அரசாணை

NEP-ஐ தமிழ்நாடு எதிர்த்து வருவதோடு, தனியாக மாநில கல்விக்கொள்கையும் வடிவமைத்து வெளியிட்டது. இந்த TSEP-ஐ பின்பற்றி பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், ISRO தலைவர் நாராயணன் உள்ளிட்ட 13 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பாட வல்லுநர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
பிஹார் தேர்தல்: மோடி, ராகுல் வேண்டுகோள்

பிஹாரில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு பிஹார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்முறை வாக்காளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதனிடையே, நேற்று ராகுல் காந்தி வாக்குத் திருட்டை முறியடித்து, விழிப்புடன் செயல்பட்டு பிஹாரின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


