News October 4, 2025
‘டியூட்’ படம் ரஜினி, ஸ்ரீதேவியை ஞாபகப்படுத்தும்: இயக்குநர்

ரஜினிக்கு 30 வயது இருந்தால் எப்படி இருக்கும் என்கிற மாதிரிதான் ‘டியூட்’ படத்தின் கதையை உருவாக்கியதாக அப்படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால் பல இடங்களில் ரஜினியின் சாயல் தெரியும் எனவும், நடிகை மமிதா பைஜு கேரக்டர் ஸ்ரீதேவி சாயலை வெளிப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், காதல் எமோஷனல் கலந்த ஜாலியான படமாக உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
சேலம்: அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணன், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் காணாமல் போனதாக அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராசிபுரம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அது மாயமான சரவணன் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 14, 2026
டிக்கெட் விலையை உயர்த்திய விமான நிறுவனங்கள்

விமான எரிபொருள் விலை உயர்வு எதிரொலியால் Air India-வைத் தொடர்ந்து, Indigo & Akasa Air நிறுவனங்களும் டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதனால் உள்நாட்டு டிக்கெட்களுக்கு ₹199 – ₹425 வரையும், வெளிநாட்டு பயணங்களுக்கு ₹1,300 – ₹18,000 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் விமான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
News March 14, 2026
நடிகை த்ரிஷாவின் புதிய PHOTOS

நடிகை த்ரிஷா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அவர் உற்சாகமூட்டுவார். அந்த வகையில், இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் வாடாமல்லி வண்ண புடவையில் இருக்கும் புதிய போட்டோஸை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குநர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஸ்டோரியாக வைத்துள்ளார். த்ரிஷாவின் பதிவுக்கு ரசிகர்கள் ❤️ விட்டு வருகின்றனர்.


