News October 4, 2025
பெண்கள் வைத்திருக்க வேண்டிய 10 சேலைகள்

சேலை உடை மட்டும் அல்ல, இந்திய பாரம்பரியத்தின் சின்னம். ஒவ்வொரு மாநிலத்திலும், அதன் தனித்துவமான நெசவுத் திறன் மற்றும் டிசைன்களில் உருவாக்கப்படும் சேலை, பண்பாட்டையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது. இந்திய பாரம்பரியத்திற்கு அழகு சேர்க்கும் சேலை வகைகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு பிடித்த சேலை எது? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News October 5, 2025
ADMK அல்ல; அது EDMK: TTV தினகரன்

பொதுச் செயலாளர் பதவிக்காக அதிமுகவின் அடிப்படை விதிகளையே மாற்றியமைத்தவர் EPS என TTV தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். EPS-ஐ தவிர ராமசாமியோ, குப்புசாமியோ யார் CM வேட்பாளராக இருந்தாலும் NDA கூட்டணிக்கு தனது ஆதரவு உண்டு என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், ADMK தற்போது EDMK ஆக மாறிவிட்டது என்றும் விமர்சித்தார். கூட்டணி பற்றி டிசம்பரில் தெரிவிப்பேன் என்று மீண்டும் கூறினார்.
News October 5, 2025
சாப்பிட்டதும் தூங்க செல்கிறீர்களா? இதை கவனிங்க

சாப்பிட்டதும் பலரும் தூங்கி விடுகிறார்கள். இது நமது ஹார்மோனல் சமநிலையை பாதிக்கும். உணவு ஜீரணத்தை தாமதமடைய செய்யும். மேலும் நெஞ்செரிச்சல், செரிமான பிரச்னையை உண்டாக்கும். உடல் எடை அதிகரிப்பு, பருமன் பிரச்னையை ஏற்படுத்தும். ஆதலால் சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடங்களாவது நடக்க வேண்டுமென உடல்நல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
News October 5, 2025
3,000 பேரை வீட்டிற்கு அனுப்பும் ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் உலகளவில் 3,000 பேரை வேலைநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி சேமிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கம் இருக்கும் என்றும், HR மற்றும் Finance துறைகளில் இந்த வேலைநீக்கம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என ரெனால்ட் விளக்கம் அளித்துள்ளது. 2024-ல் 98,636 பேர் உலகளவில் வேலை செய்தனர்.