News October 4, 2025

தவெக தார்மிக பொறுப்பேற்க வேண்டும்: TTV தினகரன்

image

கரூர் துயரத்திற்கு தவெக தார்மிக பொறுப்பை ஏற்க வேண்டும் என TTV தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பொறுப்பற்றது எனவும், கரூர் துயரத்தில் சதி இருப்பதாக அண்ணாமலை கூறியது வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க பாஜக ஏன் குழு அமைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News October 5, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 5, புரட்டாசி 19 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

News October 5, 2025

ஹமாஸ் விரைவாக முடிவெடுக்க வேண்டும்: டிரம்ப்

image

டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த இஸ்ரேல், அன்றிரவே காசாவில் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். பின்னர் இத்தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தாக்குதலை நிறுத்தியதற்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், பணயக் கைதிகளை விடுவிப்பது மட்டுமல்லாமல், மற்ற அம்சங்களை ஹமாஸ் விரைவாக ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

News October 5, 2025

ADMK அல்ல; அது EDMK: TTV தினகரன்

image

பொதுச் செயலாளர் பதவிக்காக அதிமுகவின் அடிப்படை விதிகளையே மாற்றியமைத்தவர் EPS என TTV தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். EPS-ஐ தவிர ராமசாமியோ, குப்புசாமியோ யார் CM வேட்பாளராக இருந்தாலும் NDA கூட்டணிக்கு தனது ஆதரவு உண்டு என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், ADMK தற்போது EDMK ஆக மாறிவிட்டது என்றும் விமர்சித்தார். கூட்டணி பற்றி டிசம்பரில் தெரிவிப்பேன் என்று மீண்டும் கூறினார்.

error: Content is protected !!