News October 4, 2025
நீரவ் மோடிக்கு சகல வசதிகளும் கொண்ட சிறை

நீரவ் மோடியிடம் ₹13,000 கோடி PNB வங்கி மோசடி குறித்து விசாரிக்கப்பட மாட்டாது என UK அரசிடம் இந்திய அரசு உறுதியளித்துள்ளது. மேலும், சகல வசதிகளையும் கொண்ட தரமான சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய சிறைகளின் நிலையை கருத்தில் கொண்டு, நீரவ் மோடியை நாடு கடத்த UK கோர்ட் தயக்கம் காட்டியது. இதேபோல், பெல்ஜியத்தில் உள்ள அவரது உறவினர் மெகுல் சோக்ஸிக்கும் இந்திய அரசு உறுதியளித்தது.
Similar News
News October 5, 2025
6 நிமிடத்துக்கு ஒரு ரேப்; 17 நிமிடத்துக்கு ஒரு கொலை

இந்தியாவில் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. NCRB அறிக்கைபடி 2023-ல்: *1 நிமிடத்துக்கு 1 திருட்டு *3 நிமிடங்களுக்கு ஒரு மோசடி *4 நிமிடங்களுக்கு ஒரு குடும்ப வன்முறை *5 நிமிடங்களுக்கு ஒரு கொள்ளை *6 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை *17 நிமிடத்துக்கு ஒரு கொலை *18 நிமிடத்துக்கு ஒரு பலாத்காரம் நடந்துள்ளது. கடந்த ஆண்டில் இது மேலும் அதிகரித்திருக்கும் என கணிக்கப்படுகிறது.
News October 5, 2025
ராசி பலன்கள் (05.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 5, 2025
கொதிக்கும் ரோஹித் ரசிகர்கள்

கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதற்கு, அவரின் ரசிகர்கள் SM-ல் கொதித்தெழுந்துள்ளனர். இந்திய அணி 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக கோப்பை வெல்லாமல் இருந்தது. ரோஹித் வந்தபின் 8 மாதங்களில் ஒரு தோல்வி கூட அடையாமல் 2 ICC கோப்பைகளை வென்றது. இந்திய கேப்டன்களிலேயே ODI-யில் அதிக வெற்றிவீதம் வைத்திருக்கும் ரோஹித்தை நீக்க ஒரு காரணம்கூட சொல்ல முடியாது என்று கொதிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?