News October 4, 2025
பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சி தகவல் வெளியானது

அசாம் பாடகர் <<17761763>>ஜுபின் கார்க்<<>> மர்ம மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜுபின் கார்க்கின் மேனேஜரும், சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் இணைந்து அவருக்கு விஷம் கொடுத்து கொன்றதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரில் ஒருவரான சேகர் ஜோதி கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதனை விபத்துபோல் சித்தரிக்கவே, கொலையாளிகள் வெளிநாட்டில் வைத்து கொலையை அரங்கேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 25, 2026
ஏசி விலை ₹6,000 வரை உயர்கிறது

ஏசி விலைகள் 8% முதல் 12% வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 1.5 டன் ஏசி தற்போது ₹50,000 எனில், இனி ₹50,400 – ₹56,000 வரை விற்பனை செய்யப்படும். ஜனவரி முதல் அமலுக்கு வந்த புதிய BEE ஆற்றல் மதிப்பீட்டு விதிமுறைகள், உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளன. இது தவிர, சர்வதேச சந்தையில் தாமிரம் மற்றும் அலுமினியம் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு நிறுவனங்களின் மீதான சுமையை அதிகரித்துள்ளன.
News March 25, 2026
அணு ஆயுதம்.. என் முடிவே சரி: கிம் ஜாங் உன்

ஈரான் மீதான USA தாக்குதல், வடகொரியா அணு ஆயுதங்களை வைத்திருப்பது சரிதான் என்பதை நிரூபிக்கிறது என கிம் ஜாங் உன் கூறியுள்ளார். 2019-ல் டிரம்ப்புடன் நடந்த பேச்சுவார்த்தையை குறிப்பிட்ட அவர், USA-ன் அழுத்தத்தையும், இனிமையான பேச்சையும் நிராகரித்தது சரியே எனவும் பேசியுள்ளார். மேலும், அணு ஆயுத பலம் இல்லாத நாடுகள் USA-க்கு இலக்காக மாறும் என்ற அவருடைய நம்பிக்கை உறுதியாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
News March 25, 2026
RCB-ன் பெயர் மாறுகிறதா?

உரிமம் மாறியுள்ள நிலையில், RCB அணியின் பெயர் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Royal Challengers என்பது விஜய் மல்லையாவின் பிராண்டின் பெயர் என்பதால், தற்போது உரிமைத்தை வாங்கியுள்ள ஆதித்யா பிர்லா நிறுவனம் அந்த பெயரை மாற்றலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், RCB என்பது வெறும் அணியின் பெயரல்ல, அது ரசிகர்களின் எமோஷன் எனவும் பெயரை மாற்ற வேண்டாம் என்றும் RCB ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


