News October 4, 2025
கரூரில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பட்டியலினத்தை சேர்ந்த 13 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். இதையடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழு, விபத்து நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்தனர். மேலும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருவோர், உயிரிழந்தோர் குடும்பத்தாரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News October 4, 2025
இந்த மாதம் செம ட்ரீட் இருக்கு

வானியல் ஆர்வலர்களுக்கு இந்த அக்டோபர் மாதம் செம ட்ரீட் காத்திருக்கிறது. விண்கற்கள், சூப்பர் மூன், நட்சத்திரங்கள், வீண் மீன்கள் என ஏராளமான நிகழ்வுகளை இந்த மாதத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னென்ன நிகழ்வுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. ஏலகிரி, ஜவ்வாது, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பகுதிகளில் இந்த நிகழ்வுகளை காணலாம். நீங்க ரெடியா?
News October 4, 2025
BREAKING: வைகோ மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை தனியார் ஹாஸ்பிடலில் டாக்டர்கள் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சளி பிரச்னை காரணமாக அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
News October 4, 2025
ஆறாத தழும்புகள் இருக்கா? ஈசியா போக்கலாம்

➤தழும்புகள் மீது ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெய், வைட்டமின் E எண்ணெய் மசாஜ் செய்யலாம் ➤வாரம் ஒருமுறை தயிர்-அரிசி மாவு கலந்து தழும்புகளின் மீது மிதமாக தேய்த்தால், இறந்த செல்கள் நீங்கும் ➤காஃபி தூளை தேனுடன் கலந்து தழும்புகள் மீது 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள் ➤உணவில் அதிகம் விட்டமின்ஸ், மினரல்ஸ் சேருங்கள் ➤தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும். சிறிய தழும்புகள் நீங்க இவை பயனளிக்கலாம். SHARE பண்ணுங்க.