News October 4, 2025

35 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயமா செய்யணும்!

image

35 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். டெய்லி 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்யத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!

Similar News

News March 22, 2026

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏன்?

image

புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளில் 20 -ல் போட்டியிட காங்., விரும்பிய நிலையில், அதற்கு திமுக சம்மதிக்கவில்லை; இதனால், 20 தொகுதிகளில் இருந்து 17-ஆக குறைத்துக்கொண்ட காங்கிரஸ், மீதமுள்ள 13 தொகுதிகளில் திமுக 11, விசிக 1, இந்திய கம்யூ., 1 தொகுதிகளை என ஒதுக்கீடு செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், காங்., 15 என்றால் எங்களுக்கு 15 என்ற நிலைப்பாட்டிலேயே திமுக இருப்பதால், இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

News March 22, 2026

பாஜகவில் இருந்து பிரபல தமிழ் நடிகர் விலகல்?

image

ஒரே இரவில் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த சரத்குமார், ராதிகாவுக்கு முக்கிய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை என ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் சரத்குமார் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் சமக-வை தொடங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி இருக்கிறார்களாம். அதை கேட்டுக்கொண்ட சரத், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறாராம்.

News March 22, 2026

இமாச்சலில் MLA-க்களின் சம்பளம் பிடித்தம்.. ஏன்?

image

இமாச்சல பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் அமைச்சர்கள், MLA-க்கள் & உயர் அதிகாரிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு 3% – 50% வரை சம்பள குறைப்பு அமலில் இருக்கும் என CM அறிவித்துள்ளார். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வருவாய் மானிய பற்றாக்குறையை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!