News October 4, 2025
கடல் மாநாட்டுக்கு தயாரான சீமான்

ஆடு, மாடுகளின் மாநாட்டை நடத்தி முடித்த சீமான், அடுத்ததாக என்ன மாநாடு நடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அடுத்ததாக தருமபுரியில் மலைகளின் மாநாடு, தூத்துக்குடியில் கடல் மாநாடு மற்றும் தஞ்சையில் தண்ணீர் மாநாடு நடத்த உள்ளதாக சீமான் பதில் அளித்துள்ளார். மேலும் கடல் மாநாடு தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள கடலுக்கு படகு மூலம் சென்று ஆய்வு செய்தார்.
Similar News
News March 31, 2026
243 பணியிடங்கள்.. உடனே Apply பண்ணுங்க

தேசிய தகவலியல் மையத்தில் 243 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கணினி அறிவியல் & தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல் & செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பணிகளுக்கு B.E/ B.Tech கல்வித்தகுதியுடன், GATE மதிப்பெண் அவசியமாகும். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த <
News March 31, 2026
உடலில் இருந்து நச்சுகளை நீக்கும் கோவைக்கீரை

தசை வளர்ச்சிக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் கோவைக்கீரையில் உள்ளன. இதன் மருத்துவப் பண்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கும், மலச்சிக்கலை தீர்க்கும், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும், தோல் சிரங்கு & சொறி உள்ளிட்ட சருமப் பிரச்னைகளை குணப்படுத்தும். இந்த கீரையில் கூட்டு, கடையல், சூப் தயாரித்து சாப்பிடலாம்.
News March 31, 2026
‘இந்திய கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிக்கவில்லை’

ஹார்முஸ் நீரிணையை கடப்பதற்கு இந்திய கப்பல்களிடம் ஈரான் கட்டணம் வசூலிப்பதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்பாதை குறுகலாக இருப்பதாலேயே கப்பல்கள் வருவதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. பாரசீக வளைகுடாவில் இன்னும் 20 இந்திய கப்பல்கள் இருப்பதாகவும், அதில் 5 LPG & 4 கச்சா எண்ணெய் கப்பல்கள் உள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.


