News October 4, 2025
டிகிரி முடித்தாலே போதும்; ₹35,400 வரை சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
Similar News
News October 4, 2025
பெண்கள் வைத்திருக்க வேண்டிய 10 சேலைகள்

சேலை உடை மட்டும் அல்ல, இந்திய பாரம்பரியத்தின் சின்னம். ஒவ்வொரு மாநிலத்திலும், அதன் தனித்துவமான நெசவுத் திறன் மற்றும் டிசைன்களில் உருவாக்கப்படும் சேலை, பண்பாட்டையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது. இந்திய பாரம்பரியத்திற்கு அழகு சேர்க்கும் சேலை வகைகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு பிடித்த சேலை எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 4, 2025
தவெக தார்மிக பொறுப்பேற்க வேண்டும்: TTV தினகரன்

கரூர் துயரத்திற்கு தவெக தார்மிக பொறுப்பை ஏற்க வேண்டும் என TTV தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பொறுப்பற்றது எனவும், கரூர் துயரத்தில் சதி இருப்பதாக அண்ணாமலை கூறியது வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க பாஜக ஏன் குழு அமைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 4, 2025
இதனால் தான் கில் ODI கேப்டன் ஆனார்..!

ரோஹித் சர்மாவை இந்திய ODI அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது சர்ச்சையான நிலையில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். 2027 உலகக்கோப்பைக்கு அணியை தயார்படுத்தவே ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 3 வகையிலான போட்டிகளுக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அகர்கர் தெரிவித்துள்ளார்.