News April 15, 2024
அண்ணாமலைக்கு தமிழருவி மணியன் ஆதரவு

உண்மை, நேர்மை, ஒழுக்கம் நிறைந்த அண்ணாமலை நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், இரு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க 55 ஆண்டுகளாக ஒரு தவத்தைப் பின்பற்றி வருகிறேன். அந்தத் தவத்தை நிறைவேற்றும் மனிதராக அண்ணாமலையைப் பார்க்கிறேன். அவர் மூலம் அரசியல் மாற்றம் வரும் எனக் கூறினார்.
Similar News
News April 29, 2025
தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்

அட்சய திருதியை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் தான். ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. இன்று மாலை 5.31 மணி முதல் நாளை மதியம் 2.12 மணி வரை அட்சய திருதியை நடைபெறவுள்ளது. குறிப்பாக, நாளை அதிகாலை 5.41 மணி முதல் மதியம் 12.18 மணி வரை சுப முகூர்த்தமாகும். இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் கொழிக்கும்.
News April 29, 2025
வலுக்கட்டாய கடன் வசூலுக்கு 5 ஆண்டுகள் சிறை

கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. துணை முதலமைச்சர் தாக்கல் செய்த இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு இன்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தவாக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அடாவடி கடன் வசூலால் தற்கொலைகள் அதிகரிக்கும் நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
News April 29, 2025
சல்மான் கானுக்கு நானி கொடுத்த பதில்

தென்னிந்தியாவில் பாலிவுட் படங்களை பார்ப்பதில்லை என சல்மான் கான் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த நானி அப்படி ஒன்றும் இல்லை பாலிவுட் படங்களுக்கு தென்னிந்தியாவில் எப்போதும் வரவேற்பு உள்ளதாக கூறியுள்ளார். அமிதாபச்சன் தொடங்கி சல்மான் கான் வரை அனைவரின் படமும் தெற்கில் பார்க்கப்படுவதாகவும், பல ஹிந்தி பாடல் இங்கு ஹிட்டாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.