News October 4, 2025

மயிலாடுதுறை: போக்குவரத்து மாற்றம்

image

மயிலாடுதுறை-பூம்புகார் கல்லணை சாலையில் மாப்படுகை ரயில்கேகேட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் 50 ஆண்டுகளை கடந்த சாரங்கபாணி நினைவு மேம்பாலம் கடந்த 2 ஆண்டுகளாக புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மேம்பாலத்தில் மேல்தளபகுதியில் பராமரிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கப்படவுள்ளதால் போக்குவரத்து தடை செய்ய திட்டமிப்பட்டு போக்குவரத்து இன்று தடைசெய்யப்பட்டது

Similar News

News October 4, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியரிடம் மனு

image

மயிலாடுதுறை பாஜகவின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், மயிலாடுதுறை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கூறைநாடு ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது, குறுகிய சாலையின் வழியே கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன, அந்தச் சாலை இரு வழிச்சாலையாக இல்லாத காரணத்தால் ரயில்வே கேட் இருப்பதினால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதற்கு மாற்றுப் பாதையை சரி செய்யக்கோரி மனு அளித்துள்ளனர்.

News October 4, 2025

மயிலாடுதுறை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுலாம்

image

மயிலாடுதுறை மக்களே.ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News October 4, 2025

மயிலாடுதுறை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!