News October 4, 2025
BREAKING: தவெக நிர்வாகி தலைமறைவு

நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பரப்புரையின்போது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய வழக்கில், நேற்று ஐகோர்ட் அவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, கைதுக்கு பயந்து தப்பி ஓட்டம் பிடித்த அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 19, 2026
CINEMA 360: கொக்கி குமாரு மீண்டும் வரான்!

‘புதுப்பேட்டை 2’ ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்து விட்டதாக செல்வராகவன் பதிவிட்டுள்ளார் *‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களை தொடர்ந்து VZ துரை இயக்கத்தில் சுந்தர்.சி மீண்டும் நடிக்கவுள்ளார் *சென்சார் பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், ‘துரந்தர் 2’ படம் தமிழில் நாளை வெளியாகிறது *மணிரத்னம் படத்திற்கான வேலைகளை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கியுள்ளாராம். முன்னதாக, இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக கூறப்பட்டது.
News March 19, 2026
இவர்கள் வீட்டில் இருந்தே ஓட்டு போடலாம்

85 வயதுக்கு மேற்பட்டோர், 40%க்கும் மேல் மாற்றுத்திறனாளிகள் & வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுவோர் <<19426015>>தபால் வாக்களிக்கலாம்<<>>. தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாள்களுக்குள் படிவம் 12D-ஐ பூர்த்தி செய்து தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின், அதிகாரிகள் வாக்காளரின் வீட்டிற்கு சென்று தபால் வாக்கை பதிவு செய்து கொள்வார்கள். SHARE IT.
News March 19, 2026
இந்தியாவின் வீர மகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

காஷ்மீரில் நாட்டை காக்கும் பணியில் இருந்த மக்கள் நாயகன் ஒருவரை தாய்த்திரு நாடு இழந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி சந்தீப் குமார் தாக்கா, பூஞ்ச் மாவட்டத்தின் எல்லையோர பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மரணமடைந்தார். இதையடுத்து, அந்த வீரனுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டு, தேசியக்கொடி போர்த்திய உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. RIP


