News April 15, 2024
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த்

கமல் – மணி ரத்னம் இணையும் ‘தக் ஃலைப்’ படத்திலிருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த்தும் விலகியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை மறுதலிக்கும் வகையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், 5 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற மெக்சிகன் இயக்குநர் அல்போன்சோ குரோன், கமல், ரஹ்மான், அதிதி ராவ் ஆகியோருடன் அவரும் இடம்பெற்றுள்ளார்.
Similar News
News October 23, 2025
கிருஷ்ணகிரியில் டன் கணக்கில் குப்பை

கிருஷ்ணகிரியில் தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், நகரத்தின் 33 வார்டுகளில் பட்டாசு வெடிப்பால் குப்பைகள் அதிகமாக தேங்கின. கமிஷனர் சதீஷ்குமார் உத்தரவின்படி, 10 மேற்பார்வையாளர்கள் தலைமையில் 131 துாய்மை பணியாளர்கள் இணைந்து, 30 டன் பட்டாசு குப்பையை 2 நாளில் சேகரித்து, நகராட்சி வாகனங்கள் மூலம் குப்பை கிடங்கிற்கு அனுப்பினர்.
News October 23, 2025
5 நிமிடம் இத பண்ணுங்க.. உடல் புத்துணர்ச்சி பெறும்

வருண முத்ரா உடலில் நீர் உள்ளடக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், நீரிழப்பை தடுக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வலது கையின் சிறு விரலை, உள்நோக்கி மடித்து, கட்டை விரலை அத்துடன் சேர்த்து பிடித்து, மற்ற 3 விரல்களை நீட்டிப் பிடிக்கவும். கைகளை மார்புக்கு முன் வைத்து, விரல்களை அழுத்திப் பிடிக்கவும். இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விடவும். இப்படி ஒரு 5 நிமிடம் செய்யுங்கள்.
News October 23, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவித்தார்

சென்னையில் இன்று(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். சில இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அம்மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவித்திருந்தார். முன்னதாக தருமபுரியில் இன்று பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறையாகும்.