News October 4, 2025
மூலிகை: துத்திக்கீரை மருத்துவ பயன்கள்!

துத்திக் கீரையை நறுக்கி கொதிக்க வைத்து, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து ரசமாக அருந்தினால், உடல் சூடு தணியும் *துத்தி இலையுடன் ஆமணக்கு எண்ணெய்யை வதக்கி, வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டினால், கட்டிகள் உடையும் *துத்தி இலையை கொதிக்க வைத்து, அந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் ஈறு பிரச்னைகள் தீரும் *துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும். SHARE.
Similar News
News October 4, 2025
இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கார்டில் சரியான முகவரி இருக்கிறதா என சரிபார்ப்பது நல்லது. அதில், முரண்பாடு இருந்தால் அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது சிக்கல் வரும். குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் விசாரணையில் நிராகரிக்கப்படும். அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பத்திருந்தால் அவர்களுக்கு ₹1,000 கிடைக்காது. SHARE
News October 4, 2025
அக்டோபரில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

அக்டோபர், புத்துணர்ச்சியும் அமைதியான சூழலும் கொண்ட மாதம். ஏரிகள் நிரம்பி இருக்கும். கடுமையான குளிர்காலம் தொடங்குவதற்கு முன், காற்று, மிதமான குளிர்ச்சியில் இருக்கும். நீர்வீழ்ச்சிகள் ஆர்ப்பரித்து கொட்டும். கடற்கரைகள் கூட்டம் இல்லாமல் இருக்கும். எனவே, அக்டோபர் மாதத்தில் சுற்றுலா செல்ல விரும்புவோர், மேலே போட்டோக்களில் உள்ள இடங்களை சுற்றிப் பாருங்க. நீங்க எந்த ஊருக்கு போறீங்க?
News October 4, 2025
ஜப்பானில் முதல்முறையாக பெண் பிரதமர்?

தீவிர வலதுசாரி தலைவரான சனே தகைச்சி, ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை சனே தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்று பெருமையை அவர் பெறுவார். ஆளும் LDP கட்சி தலைவருக்கான தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் 15-ம் தேதி பிரதமரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக ஜப்பான் நாடாளுமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.