News April 15, 2024

30 மாதங்களில் இல்லாத உயர்வு

image

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு 64,856.2 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட குறிப்பில், “ஏப்ரல் 5ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 298 கோடி டாலர் உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய அதிகபட்சமாக கடந்த 2021 அக்டோபரில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,245.3 கோடி டாலரை எட்டியது” எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News August 17, 2025

3 முதல்வர்கள் ஒன்றாக திறந்த வைத்த தியேட்டர் இடிப்பு

image

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கொடிகட்டி பறந்த கே.பி.எஸ். (பழம்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாளால் கட்டப்பட்ட) திரையரங்கம் இடிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய 3 பேரும் ஒன்றாக வந்து திறந்து வைத்த வரலாற்று சிறப்பு இந்த திரையரங்கிற்கு இருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கருணாநிதியும், எம்ஜிஆரும் தியேட்டரை திறந்து வைக்க, ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றினார்.

News August 17, 2025

அதிமுகவால் பாஜகவை விட முடியாது: மைத்ரேயன்

image

பாஜகவை மீண்டும் கழட்டி விட்டுவிட்டு தவெகவுடன் அதிமுக இணையலாம் என்ற தகவல் அரசியல் அரங்கில் உலாவுகிறது. ஆனால் அப்படி நிச்சயமாக நடக்காது, அதற்கு BJP-யும் அனுமதிக்காது என்கிறார் மைத்ரேயன். சமீபத்திய பேட்டி ஒன்றில், அதிமுக கூட்டணிக்கு 2026 தேர்தல் மிகப்பெரிய தோல்வியை தரும் என்றார். ADMK-விலிருந்து பலரும் வெளியேறக் காரணம், சரியான தலைமை இல்லாததே என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News August 17, 2025

ஊழலில் திமுகவுக்கு தேசிய விருது: EPS

image

எல்லாவற்றிலும் கமிஷன் கிடைப்பதால், விலைவாசி உயர்வு பற்றி திமுக அரசு கவலைப்படவில்லை என EPS விமர்சித்துள்ளார். வந்தவாசியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், திமுகவை பொறுத்தவரை ஊழல் செய்வதற்கு தேசிய விருது கொடுக்கலாம் என சாடியுள்ளார். அதிமுக ஆட்சி அமையும்போது திமுக அரசின் 5 ஆண்டு ஊழல்களும் விசாரிக்கப்படும் என்றார். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப எதிரிகளைத் தோற்கடிக்க அமைக்கப்படுவது எனக் கூறினார்.

error: Content is protected !!