News October 4, 2025
புதுகை: கோவில் அருகே கஞ்சா விற்பனை!

திருமயம் அருகே உள்ள லேனா விளக்கு விநாயகர் கோவில் அருகே நாகராஜ் (20),முத்து மணி(31),பாண்டி அழகு (26) ஆகிய மூவரும் நேற்று (அக்.3) கஞ்சா பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நமண சமுத்திரம் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 320 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொருள், ரூ.3300, ஆண்ட்ராய்டு மொபைல் 2-யும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News October 29, 2025
புதுக்கோட்டை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 29, 2025
புதுக்கோட்டை: பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை, அன்னவாசல் அருகே சொக்கநாதன்பட்டியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், ஆண்டிப்பட்டியை சேர்ந்த சங்கர் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 29, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபான கடைகள் அடைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுகை-திருப்பத்தூர் ரோடு, புதுகை-தஞ்சாவூர் ரோடு, திருச்சி ரோடு, விராலிமலை ரோடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் தேவர்ஜெயந்தி, குருபூஜையையொட்டி குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும் (அக்.,29) நாளையும் (அக்.,30) விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி புதுகை மாநகர், ஆவுடையார்கோவில் திருமயம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் 37 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


