News October 4, 2025
நாமக்கல்: மாணவ/மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு!

உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ/மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. 2025-26 ஆண்டிற்கான திருக்குறள் போட்டியில் கலந்துக் கொள்ள விரும்பும் நாமக்கல்லை சேர்ந்த மாணவ/மாணவியர் அக்.31ந் தேதிக்குள் https://tamilvalarchithurai.org/tkm/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 4, 2025
நாமக்கல்: திருமண தடை நீங்க இங்க போங்க!

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் எயிலிநாதர் கோயில் அமைந்துள்ள. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. இங்கு திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். SHARE பண்ணுங்க!
News October 4, 2025
நாமக்கல்: அக்.10 கடைசி தேதி ஆட்சியர் தகவல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெறுவதற்கு வரும் அக்.10ந் தேதிக்குள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற (ம) பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும். இணைய தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் டிச.13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு மின் ஒயரிங் தொழிலில் 5 வருட செய்முறை அனுபவம் (ம) 21 வயது நிரம்பியவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் https://skilltraining.tn.gov.in/ இல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அக்.17க்குள் அனுப்பிக்க வைக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தகவல். SHAREIT