News October 4, 2025

இலவச சிலிண்டர் … ஹேப்பி நியூஸ்

image

‘PM உஜ்வாலா யோஜனா’ திட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இது தவிர மானியமும் வழங்கப்படுகிறது. TN-ல் ஏற்கெனவே 40 லட்சம் பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. தற்போது இத்திட்டத்தில் 25 லட்சம் புதிய காஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், 10%(2.50 லட்சம்) இணைப்புகள் நகரமயமாக்கல் அதிகமாக இருக்கும் தமிழகத்திற்கு ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News October 4, 2025

மெக்னீசியம் குறைவா இருக்கா?

image

மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றான மெக்னீசியம், 300-க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம் குறைவாக இருந்தால், தசை வலி, சோர்வு, மன அழுத்தம், தூக்கம் குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். மேலே மெக்னீசியம் நிறைந்த உணவுகளை, போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத வேறு ஏதேனும் உணவு, உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

News October 4, 2025

பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சி தகவல் வெளியானது

image

அசாம் பாடகர் <<17761763>>ஜுபின் கார்க்<<>> மர்ம மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜுபின் கார்க்கின் மேனேஜரும், சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் இணைந்து அவருக்கு விஷம் கொடுத்து கொன்றதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரில் ஒருவரான சேகர் ஜோதி கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதனை விபத்துபோல் சித்தரிக்கவே, கொலையாளிகள் வெளிநாட்டில் வைத்து கொலையை அரங்கேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 4, 2025

Thank you Captain ரோஹித் சர்மா!

image

ICC சாம்பியன்ஸ் டிராபி, T20 உலகக்கோப்பை என இந்திய அணியை கிரிக்கெட்டின் உச்சத்திற்கு அழைத்து சென்ற ரோஹித் சர்மாவின் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 2027 ODI உலகக்கோப்பை வென்று கொடுத்த பிறகு தான், ரோஹித் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், BCCI வேறோரு முடிவை எடுத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். உங்களுக்கு பிடிச்ச கேப்டன் ரோஹித் மொமண்ட் எது?

error: Content is protected !!