News October 4, 2025
அண்ணாமலை சென்ற விமானத்தில் சிக்கல்..

அண்ணாமலை உட்பட 100-க்கும் மேற்பட்டோர் சென்ற விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பதற்றம் உருவானது. சென்னையில் இருந்து மதுரை சென்ற இந்த விமானம் லேண்டாக வேண்டிய கடைசி நிமிடத்தில் மீண்டும் மேல் நோக்கி பறக்க தொடங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிகப்படியான வெப்ப அலை இருந்ததால் விமானம் தரையிறக்கப்படவில்லை. 13 நிமிடங்கள் கழித்து மீண்டும் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
Similar News
News March 19, 2026
தமிழகத்தைச் சேர்ந்தவர் இந்திய தூதராகிறார்

சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் கே.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர், 1992 பேட்ஜ் இந்திய வெளியுறவு சேவை அதிகாரி ஆவார். பத்திரிகை துறையிலும் பணியாற்றிய இவர், சீனம், பிரெஞ்சு, கொரிய மொழிகளிலும் புலமை பெற்றவர். 2002-ல் பிரதமரின் தனிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது UK-வின் இந்திய உயர் ஆணையராக உள்ள நிலையில், புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
News March 19, 2026
BREAKING: மகளிருக்கு நாதகவின் தேர்தல் வாக்குறுதி!

நாம் தமிழர் கட்சியில் மகளிருக்கு பல்வேறு வாக்குறுதிகளை சீமான் அளித்துள்ளார். குறிப்பாக, பெண்களுக்கு தனித்தொகுதி, அரசு வேலைகளில் மகளிருக்கு சரிபாதி இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் அதில் இடம் பெற்றுள்ளன. திமுகவும், அதிமுகவும் வாக்குகளை விலைக்கு வாங்க பணம்(₹2,000) அறிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி பெண்களின் உரிமைக்காக, தான் இந்த வாக்குறுதிகளை வெளியிடுவதாக சீமான் கூறியுள்ளார்.
News March 19, 2026
பள்ளி சிறுமிக்கு திமுக நிர்வாகி பாலியல் தொல்லை

செங்கல்பட்டு அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். திமுகவில் கிளைக் கழக நிர்வாகியாக உள்ள சிவா, சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் மேல்மருவத்தூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


