News October 4, 2025
தவெக நிர்வாகிகளை கைது செய்ய விரைந்த தனிப்படை

கரூர் துயரம் தொடர்பான வழக்கில் N.ஆனந்த், CTR நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைக்குள் கைதாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம், ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை HC உத்தரவிட்டுள்ளதால், கட்சியின் உயர் பொறுப்பாளர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.
Similar News
News October 4, 2025
டிரம்ப் பேச்சை மதிக்காத இஸ்ரேல்.. தொடர் தாக்குதல்

காசாவில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டதாகவும், அதனால் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் டிரம்ப் கூறிய சில மணி நேரங்களில், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. 2 இடங்களில் புதிதாக நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். டிரம்ப்பின் அமைதி திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்துவதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
News October 4, 2025
டி20 அணி: ஹர்திக் OUT, நிதிஷ் IN

ஆஸ்திரேலிய தொடருக்கான டி20 அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக், நிதிஷ் ரெட்டி, ஷிவம் துபே, அக்ஷர், ஜிதேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, பும்ரா, அர்ஷ்தீப், குல்தீப், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் உள்ளனர். காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அணியில் இடம்பெறவில்லை.
News October 4, 2025
சமைக்கும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க!

ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைப்படி, சமைக்கும் போது: ★எண்ணெய் & மசாலாப் பொருள்கள் அதிகம் பயன்படுத்தினால், உணவின் கலோரி அளவு அதிகரிக்கும் ★சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்துவது வைட்டமின் C & B9 போன்றவற்றை அழித்துவிடும் ★காய்கறிகளை Over cook செய்வது, வைட்டமின் & தாதுக்களை அழித்துவிடும் ★உருளைக்கிழங்கு, வெள்ளரி போன்றவற்றின் தோலை நீக்கவேண்டாம். அவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம். SHARE IT.