News October 4, 2025
ஜனநாயகன் ரிலீஸில் சிக்கலா?

விஜய்யின் அரசியல் வருகைக்கு மத்தியில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனிடையே, கரூர் துயர சம்பவம் அவரது பரப்புரைக்கே முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தீபாவளியை முன்னிட்டு படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த பிளான் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.
Similar News
News March 31, 2026
அதிமுகவை பாஜகவிடம் EPS விற்றுவிட்டார்: உதயநிதி

மத்திய அரசின் அடிமையாக EPS செயல்படுகிறார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வந்தவாசியில் பிரசாரம் செய்த அவர், கடந்த தேர்தலில் அதிமுகவை பாஜகவுக்கு வாடகைக்கு விட்டிருந்த EPS, இந்த தேர்தலில் அதிமுகவை பாஜகவிடம் விற்பனை செய்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், அதிமுகவை அடிமைப்படுத்தி தமிழகத்தை ஆள நினைப்போரை விரட்டி அடிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
தேர்தலுக்கு பிறகு அதிமுக இருக்காது: நிர்மல் குமார்

தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் பொ.செ., ஆக EPS இருக்கமாட்டார் என CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது சமம் என்பதை மக்கள் புரிந்து கொண்டதால், எந்த தொகுதியிலும் அதிமுக வெற்றிபெறாது எனவும் கூறினார். ஏற்கெனவே, பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அதிமுக, தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் இணைக்கப்பட்டு காணாமல் போய்விடும் என்றும் அவர் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
தமிழகத்தில் ₹296.4 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்

TN முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரொக்கம் மட்டும் ₹61.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக CEO அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ₹197.35 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள், ₹1.17 கோடி மதிப்பிலான மதுபானம்; ₹8.39 கோடி மதிப்பிலான போதை பொருள்கள், ₹27.51 கோடி மதிப்பு இலவச பொருள்களோடு ரொக்கத்தையும் சேர்த்தால் ஒட்டுமொத்த மதிப்பு ₹296.4 கோடி ஆகும். TNElection2026


