News April 14, 2024

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காது

image

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காதென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக நேற்றிரவு இஸ்ரேல் நிலைகள் மீது ஈரான் ட்ரோன்கள், ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இஸ்ரேல் ஆதரவில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியுள்ளது.

Similar News

News October 29, 2025

நீங்களும் வீட்டில் இத யூஸ் பண்றீங்களா.. உஷாரா இருங்க!

image

காய்கறிகளை நறுக்க வீடுகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போர்டுகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Sharp-ஆன கத்தியால், போர்டு சேதமடைந்து, பிளாஸ்டிக் துகள்கள் உணவில் கலக்கின்றன. மேலும், சரியாக கழுவப்படாமல் இருக்கும் பட்சத்தில், பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இவை உணவில் கலப்பதால், ஹார்மோன் பாதிப்பு, உடல்பருமன், கேன்சர் ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

News October 29, 2025

முதல் T20: இந்திய அணி பேட்டிங்

image

கான்பெராவில் நடக்கும் முதல் T20-யில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, பும்ரா. வெல்லுமா இந்த படை?

News October 29, 2025

நவ.1-ம் தேதி முதல் ஆதாரில் வரும் முக்கிய மாற்றங்கள்

image

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் ✱ஆதார் கார்டில் பெயர், விலாசம், DOB, போன் நம்பரை மாற்ற ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டிய அவசியம் இல்லை. ஈசியாக ஆன்லைனில் மாற்றலாம். PAN, பாஸ்போர்ட் ஆகியவற்றை வைத்து தரவு சரிபார்க்கப்படும் ✱ஆதாரில் மாற்றங்களை செய்ய ₹75 வசூலிக்கப்பட உள்ளது. மேலும், Biometric அப்டேட்களுக்கு ₹125 வசூலிக்கப்படும். முன்னதாக, இதற்கு ₹100 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!