News October 4, 2025
ஜெய்சங்கர் – பிரேசில் சிறப்பு ஆலோசகர் சந்திப்பு

பிரேசில் அதிபரின் சிறப்பு ஆலோசகரும், தூதருமான செல்ஸோ அமோரிமை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் சந்தித்துள்ளார். அப்போது இருநாட்டு ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் சர்வதேச விஷயங்களை பேசியுள்ளனர். மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த அமோரிம், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு, எரிசக்தி, மருத்துவம் மற்றும் மருந்துகள் குறித்து ஆலோசித்துள்ளார்.
Similar News
News April 9, 2026
BREAKING: ஜன நாயகன் படம் இணையத்தில் லீக்கானது

ஜன நாயகன் படத்தின் காட்சிகள் ரிலீஸுக்கு முன்னரே லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனின் 5 நிமிட காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளன. அவை செல்போனில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது. ஏற்கெனவே சென்சார் பிரச்னையால் படம் ரிலீஸாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News April 9, 2026
எகிறிய வாக்குப்பதிவு.. புதுச்சேரிதான் டாப்!

புதுச்சேரி, கேரளா, அசாமில் வழக்கத்தைவிட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இரவு 7 மணி நிலவரப்படி, புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவிற்கு 89.08% வாக்காளர்கள் ஆர்வமாக ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். அதேபோல், கேரளாவில் 77.8%, அசாமில் 85.3% வாக்குகள் பதிவாகியுள்ளன. மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
News April 9, 2026
ஒரே பாட்டில் அரசியலில் முன்னேற முடியாது: அன்புமணி

அரசியல் என்றால் என்ன என்று விஜய்க்கு அன்புமணி விளக்கம் கொடுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் விஜய் குறித்து இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அரசியல் என்பது ஒரே பாடலில் பணக்காரராவது கிடையாது என்றும், அரசியலில் படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசியல் என்றால் தரையில் நிற்கனும், மக்களை சந்திக்கனும் எனவும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.


