News October 4, 2025
அக்டோபர் 4: வரலாற்றில் இன்று

*உலக விலங்கு தினம்.
*உலக விண்வெளி வாரம் (அக்.4 – 10) தொடங்கியது.
*1824 – மெக்ஸிகோ குடியரசு நாடானது.
*1830 – ‘பெல்ஜியம்’ நெதர்லாந்து நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடாகியது.
*1884 – சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்.
*1904 – திருப்பூர் குமரன் பிறந்தநாள்.
Similar News
News October 4, 2025
சற்றுமுன்: கனமழை வெளுத்து கட்டும்

அரபிக் கடலில் உருவான ‘சக்தி’ புயல்’ வலுவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இன்று, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News October 4, 2025
கரூரில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பட்டியலினத்தை சேர்ந்த 13 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். இதையடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழு, விபத்து நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்தனர். மேலும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருவோர், உயிரிழந்தோர் குடும்பத்தாரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
News October 4, 2025
35 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயமா செய்யணும்!

35 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். டெய்லி 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்யத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!