News October 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 478 ▶குறள்: ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. ▶பொருள்: வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

Similar News

News October 4, 2025

டிகிரி முடித்தாலே போதும்; ₹35,400 வரை சம்பளம்!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 4, 2025

ஒரே நாளில் விலை ₹3000 உயர்வு.. இதுவே முதல்முறை

image

தங்கம் விலையை தொடர்ந்து, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1 கிராம் வெள்ளி விலை ₹3 உயர்ந்து ₹165-க்கும், கிலோ வெள்ளி ₹3000 உயர்ந்து ₹165,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 9 நாள்களில் மட்டும் சுமார் ₹15,000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

News October 4, 2025

பிப்ரவரியில் ரிலீஸாகும் தனுஷின் அடுத்த படம்

image

பீரியட் மற்றும் திரில்லர் ஜானரில் உருவாகும் தனுஷின் 54-வது படத்தை போர்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். மூன்று மாதத்திற்கு முன் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியிட முடிவு செய்துள்ளதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!