News October 4, 2025

டாப் 50-யில் சென்னை உணவகங்கள்

image

2025-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த 50 உணவகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் – 13, பெங்களூருவில் – 9, டெல்லியில் – 9, கோவாவில் – 8, சென்னையில் – 5, கொல்கத்தாவில் – 3 உணவகங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சென்னையில் மிகவும் பிரபலமான ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள அவர்தனா உணவகம் 8-வது இடத்தை பிடித்துள்ளது. உங்களுக்கு பிடித்த உணவகம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News October 4, 2025

உடல் எடையை குறைக்க உதவும் ‘பாசிப்பயறு அடை’

image

◆உடல் எடை குறைப்பு, செரிமானம் & இதய ஆரோக்கியத்திற்கு இது சிறந்தது. ➥பாசிப்பயிறு & அரிசியை தனித்தனியாக 4- 5 மணி நேரம் ஊற வைக்கவும். ➥ஊறிய பிறகு, அதில், வெங்காயம், சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை & உப்பு சேர்த்து மாவாக அரைத்து கொள்ளவும். ➥இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய தேவையே கிடையாது. அரைத்ததும் அப்படியே அடை செய்யலாம். SHARE IT.

News October 4, 2025

சற்றுமுன்: கனிமொழி வீட்டில் பரபரப்பு

image

சென்னையிலுள்ள திமுக MP கனிமொழி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, <<17900677>>ஸ்டாலின்<<>>, த்ரிஷா இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

News October 4, 2025

பணயக் கைதிகளை மீட்பது எப்போது? டிரம்ப்

image

பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதற்கு டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைதிக்கு தயாராக இருப்பதாக நம்புவதாக ட்ரூத் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், காஸாவில் குண்டு வீசுவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தற்போது பணயக் கைதிகளை மீட்பது மிகவும் ஆபத்தானது என்றும், பேசித் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!