News October 4, 2025
சரவண பவன் பயோபிக்கில் நடிக்கிறாரா சத்யராஜ்?

பிரபல சரவண பவன் ராஜகோபால் கதை படமாகவுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இதனை TJ ஞானவேல் இயக்கவுள்ளார். இந்நிலையில், சரவண பவன் அண்ணாச்சியாக சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பெரியார்’ பயோபிக் படத்தில் சத்யராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ‘தோசை கிங்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News October 4, 2025
இலவச சிலிண்டர் … ஹேப்பி நியூஸ்

‘PM உஜ்வாலா யோஜனா’ திட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இது தவிர மானியமும் வழங்கப்படுகிறது. TN-ல் ஏற்கெனவே 40 லட்சம் பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. தற்போது இத்திட்டத்தில் 25 லட்சம் புதிய காஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், 10%(2.50 லட்சம்) இணைப்புகள் நகரமயமாக்கல் அதிகமாக இருக்கும் தமிழகத்திற்கு ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 4, 2025
கரூர் சம்பவத்தில் விஜய் என்ன தவறு செய்தார்?: H ராஜா

ஒட்டுமொத்த கரூர் சம்பவத்தில் விஜய் என்ன தவறு செய்தார் என்று H ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் காலதாமதமாக வந்தார் என்றால், அது எப்படி தவறாகும் என பேசிய அவர், 36 மணி நேரம் கழித்து வந்த MGR-ஐ பார்ப்பதற்கு மக்கள் காத்திருந்தனர் என்றும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மீது தவறிருப்பதாகவும், கரூர் SP-ஐ சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
News October 4, 2025
சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த பொருள் போதும்

பாகற்காய் இலைகள் பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதில், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின், ஃபோலேட், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இது மலச்சிக்கலை குணப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சுகரை குறைக்கும். ஆனால், இதன் பலன்கள் ஒருவருக்கொருவர் வேறுபடும் என்பதால், சுகர் இருப்பவர்கள் மருத்துவர்களை கேட்டு இதை உணவில் சேர்க்கலாம் என கூறுகின்றனர். SHARE.