News October 4, 2025

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்தின் சிறப்புகள்

image

2026 FIFA உலகக் கோப்பை தொடருக்கான கால்பந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. adidas நிறுவனம் தயாரித்துள்ள இப்பந்தில் 3 நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வண்ணங்கள் தொடரை நடத்தும் கனடா (சிவப்பு), பச்சை (மெக்ஸிகோ), நீலம் (USA) ஆகிய நாடுகளை பிரதிபலிக்கின்றன. ‘Trionda’ வகையில் இப்பந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பானிஷ் மொழியில் ‘3 அலைகள்’ என பொருள். இத்தொடர் 2026, ஜூன் 11-ல் தொடங்குகின்றன.

Similar News

News October 4, 2025

TVK-வுக்கு நாங்க மார்க்கெட்டிங் ஆபிசரா? அண்ணாமலை

image

சும்மா நொச்சு நொச்சுன்னு எங்ககிட்டயே கேட்குறீங்க, போய் விஜய் கிட்ட கேளுங்க, தவெககாரங்க கிட்ட கேளுங்க என்று கடுகடுத்துள்ளார் அண்ணாமலை. பாஜகவின் A டீம் தான் திமுக என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். தவெகவுக்கு நாங்கள் (பாஜக) என்ன மார்க்கெட்டிங் ஆபிஸரா என்றும் அவர் கோபமாக கேள்வி எழுப்பினார். கரூர் சம்பவம் குறித்து கருத்துகள் ஏற்கெனவே சொல்லியாச்சு என்றும் கூறினார்.

News October 4, 2025

ஜனநாயகன் ரிலீஸில் சிக்கலா?

image

விஜய்யின் அரசியல் வருகைக்கு மத்தியில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனிடையே, கரூர் துயர சம்பவம் அவரது பரப்புரைக்கே முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தீபாவளியை முன்னிட்டு படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த பிளான் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.

News October 4, 2025

கோவையில் உலக புத்தொழில் மாநாடு

image

கோவையில் அக்.9, 10-ம் தேதிகளில், தமிழக அரசு சார்பில் ‘உலக புத்தொழில் மாநாடு’ நடைபெறவுள்ளது. இதில் 39 நாடுகளிலிருந்து 364 பங்கேற்பாளர்களுடன் 30,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களை சேர்ந்த அரசு துறைகளும் பங்கேற்கின்றன. அத்துடன், 1,000-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்படுகின்றன.

error: Content is protected !!