News October 4, 2025

ஜாதியை ரீதியிலான பதிவுகளுக்கு கடும் நடவடிக்கை – நெல்லை எஸ்.பி

image

நெல்லை எஸ்பி சிலம்பரசன் செய்தி குறிப்பில், சமூக ஊடகங்களில் சட்ட ஒழுங்கை மீறும் பதிவுகள் மீது காவல்துறை தீவிர கண்காணிப்பு செய்து வருகிறது. சமூக வலைதளங்களில் பதிவிடப்படும், பிரச்னைக்குரிய பதிவுகள், சாதிய ரீதியிலான பிரச்னைக்கு முக்கிய காரணியாக இருந்து வருவதால், இது போன்ற பதிவுகள் செய்பவர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், 108 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News October 4, 2025

வள்ளியூர் வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று மாற்றம்

image

வள்ளியூர், நெல்லை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் – கோவை (வண்டிஎண்.16321) எக்ஸ்பிரஸ் இன்று நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு விருதுநகர் – கரூர் இடையே மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். இதனால் அந்த ரயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, வழியாக செல்லாது. ரயில்வே சாலை பராமரிப்பு காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News October 4, 2025

நெல்லை மாணவர்களே – ரூ.15 ஆயிரம் வேணுமா??

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கையில்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. வெற்றி பெறுவோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்று உண்டு; விண்ணப்பங்களை மண்டல தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் அக்.24ம் தேதிக்குள் வழங்க வேண்டும். (கூடுதல் விபரங்களுக்கு 0462-2502521) *ஷேர்

News October 3, 2025

ஆசிரியர் கூட்டணி செயற்குழுவுக்கு அழைப்பு

image

நெல்லை மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் மைக்கல் ஜார்ஜ் கமலேஷ் இன்று விடுத்துள்ள அறிக்கை: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 4ம் தேதி பகல் 11 மணிக்கு டக்கரம்மாள்புரம் மாவட்ட கட்டிடத்தில் நடைபெறும். மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமை தாங்குகிறார். (அக்டோபர் 8) மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!