News October 4, 2025

நாமக்கல்: மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

image

நாமக்கல் அரசு ஆண்கள்(தெற்கு) மேல்நிலை பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, அக்.14ந் தேதி அரசு/தனியார் பள்ளி 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், அக்.15ந் தேதி அரசு/தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் காலை 09.30 மணியளவில் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04286292164 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளவும்.

Similar News

News October 4, 2025

நாமக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, நாமக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே<> இங்கு கிளிக் <<>>செய்து மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணை அறிந்து அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News October 4, 2025

நாமக்கல்லில் ரூ.6 லட்சம் மானியம் கலெக்டர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் 15 உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது எனவே விருப்பமுள்ள வேளாண் தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ARS வலைதளத்தில் பதிவு செய்து ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியமாக வங்கி கடன் மூலம் பெற்று பயன்பெறலாம் ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்

News October 4, 2025

நாமக்கல்: மாணவ/மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு!

image

உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ/மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. 2025-26 ஆண்டிற்கான திருக்குறள் போட்டியில் கலந்துக் கொள்ள விரும்பும் நாமக்கல்லை சேர்ந்த மாணவ/மாணவியர் அக்.31ந் தேதிக்குள் https://tamilvalarchithurai.org/tkm/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!