News October 4, 2025

மயிலாடுதுறையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு 10 மணி முதல் (அக்.,3) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 4, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் இன்று திருவெண்காடு துணை மின் நிலையம் மற்றும் மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் திருவெண்காடு, பூம்புகார், நாங்கூர், திருவாலி, பெருந்தோட்டம், வழுவூர், எலந்தங்குடி, கப்பூர், பூவாலை, செருதியூர், கோடங்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 4, 2025

மயிலாடுதுறை: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கில் இருந்த பணத்தை இழக்க நேரிட்டால் 1930 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. உங்கள் பணம் மோசடி நபர்களிடமிருந்து மீட்டு தரப்படும் என தெரிவித்துள்ளது வேறு வகையான சைபர் குற்றம் சம்பந்தமாக www.cybercrime.gov.in ல் புகார் தெரிவிக்கலாம்

News October 3, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள ஸ்ரீகண்டபுரம் கிராமத்தில் குட் லக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் என்னும் பல்நோக்கு மருத்துவ முகாம் நாளை (அக் 04) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனை ஸ்ரீகண்டபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பயன்படுத்திக் கொண்டு மருத்துவ முகாமில், கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!