News October 4, 2025
போரை நிறுத்தலன்னா… ஹமாஸை எச்சரித்த டிரம்ப்

இஸ்ரேலுடன் போரை நிறுத்த ஹமாஸுக்கு அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். வரும் ஞாயிறுக்குள் ஒப்பந்தம் செய்யாவிட்டால், ஹமாஸ் நரகத்துக்கு தான் போக வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்குக்கு பல்லாண்டுகளாக அச்சுறுத்தலாக உள்ள ஹமாஸ், கடந்த அக்.07, 2023-ல் இஸ்ரேலில் மிகப்பெரிய இனவழிப்பை செய்தது என்ற அவர், இதற்கு பதிலடியாக இதுவரை 25,000+ ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News October 4, 2025
தினமும் தலைகீழாக நிற்பதால் கிடைக்கும் பலன்கள்

தலைகீழாக நிற்பதை யோக கலையில் சிரசாசனம் என்று அழைக்கின்றனர். இந்த சிரசாசனம் தினமும் செய்வதால், இரத்த ஓட்டம் மேம்படுவதுடன், உடலுக்கும், மனதுக்கும் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சில நன்மைகள் உள்ளன. அவை என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், இல்லாத நன்மைகள் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News October 4, 2025
இரவில் ஒன்று பகலில் வேறாக பேசிய சீமான்

ஒருவர் மீது கொலைவெறி வந்தால், அடுத்த கூட்டத்தில் (தவெக பரப்புரை) அவரை தள்ளிவிடுவேன், அங்கு நசுங்கி இறந்துவிடுவார், இதனால் கொலை செய்து சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என அக்.2 இரவில் சீமான் பேசியுள்ளார். பின்னர், நேற்று காலை பேட்டியளித்த அவர், கரூர் துயரைவிட பெரும் இனப்படுகொலையை பார்த்தவன் நான், இதற்கு வருத்தம் கூட விஜய் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த வேறுபட்ட கருத்து பேசுபொருளாகியுள்ளது.
News October 4, 2025
ருக்மினி நடிப்பை சந்தேகப்பட்ட தயாரிப்பாளர்

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தில் ருக்மினி வசந்தின் நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் ஜூனியர் NTR நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்பட தயாரிப்பாளர் ரவி ஷங்கர், ஜூனியர் NTR நடிப்பில் 80% ஆவது ருக்மினி நடிப்பார் என நம்புகிறேன் என கூறியுள்ளார். இதனால் வெகுண்டெழுந்த ரசிகர் பட்டாளம், ‘ஒருவரை பாராட்டுவதற்கு மற்றவரை இகழாதீர்கள்’ என கூறி விமர்சித்து வருகின்றனர்.