News October 4, 2025
₹5 கோடி… தெகிடி பாணியில் இன்ஷூரன்ஸ் மோசடி

தெகிடி படத்தில் வருவதுபோல், கர்நாடகா கவுல்பெட்டில் ₹5.2 கோடி இன்ஷூரன்ஸ் தொகைக்காக ஒரு கும்பல் மாற்றுத் திறனாளி ஒருவரை கொலை செய்துள்ளனர். இந்த கொலையை விபத்துபோல காண்பிக்க, டூவீலருடன் உடலை போட்டு காரால் மோதியுள்ளனர். அதன்பின், ஒரு பெண்ணை அவரது மனைவி போல செட்-அப் செய்து இன்ஷூரன்ஸ் தொகை கேட்டுள்ளனர். இதையறிந்த இறந்தவரின் மனைவி போலீஸில் புகாரளிக்க, அந்த கும்பல் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது.
Similar News
News October 4, 2025
ருக்மினி நடிப்பை சந்தேகப்பட்ட தயாரிப்பாளர்

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தில் ருக்மினி வசந்தின் நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் ஜூனியர் NTR நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்பட தயாரிப்பாளர் ரவி ஷங்கர், ஜூனியர் NTR நடிப்பில் 80% ஆவது ருக்மினி நடிப்பார் என நம்புகிறேன் என கூறியுள்ளார். இதனால் வெகுண்டெழுந்த ரசிகர் பட்டாளம், ‘ஒருவரை பாராட்டுவதற்கு மற்றவரை இகழாதீர்கள்’ என கூறி விமர்சித்து வருகின்றனர்.
News October 4, 2025
ஜெய்சங்கர் – பிரேசில் சிறப்பு ஆலோசகர் சந்திப்பு

பிரேசில் அதிபரின் சிறப்பு ஆலோசகரும், தூதருமான செல்ஸோ அமோரிமை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் சந்தித்துள்ளார். அப்போது இருநாட்டு ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் சர்வதேச விஷயங்களை பேசியுள்ளனர். மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த அமோரிம், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு, எரிசக்தி, மருத்துவம் மற்றும் மருந்துகள் குறித்து ஆலோசித்துள்ளார்.
News October 4, 2025
அக்டோபர் 4: வரலாற்றில் இன்று

*உலக விலங்கு தினம்.
*உலக விண்வெளி வாரம் (அக்.4 – 10) தொடங்கியது.
*1824 – மெக்ஸிகோ குடியரசு நாடானது.
*1830 – ‘பெல்ஜியம்’ நெதர்லாந்து நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடாகியது.
*1884 – சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்.
*1904 – திருப்பூர் குமரன் பிறந்தநாள்.